Saturday 19 February 2011

பாரதி ...பாப்பா...பாப்பா பொய்

யார் யாரிட்ட எது எதில என்னாத்துக்கொல்லாம் பொய் பேசரதுனு விவஸ்தையே இல்லை .

பெரியவங்கள ஏமாத்த பொய் சொன்னா அதக்கூட பெரியவங்களுக்கு புத்தியென்ன கேட்டாபோச்சு இத நம்பரதுக்குனு சொல்லி ஆதரவாளர்கள் தப்பிக்கலாம் .

ஆனா

சின்ன பிள்ளைங்க எங்ககிட்ட போய் யாராச்சும் பொய் சொல்லுவாங்களா ... அதுவும் மகாகவினு சொல்லிட்டு

//சாதிகள் இல்லையடி பாப்பா! - //


னு சொல்லிட்டு

// ஆயிரம் உண்டிங்கு ஜாதி -//


னு சொன்னா ... இது ஏமாத்து... பொய்னு
சின்னப்பிள்ளைக யாரிடம் போய் முறையிடமுடியும்? .

டீச்சரிட்ட கேட்டா ...பாரதியவே கேள்வி கேக்க ஆரம்பிச்சட்டயா ? .நீ என்ன பெரிய அறிவாளாயானு மட்டந்தட்டப்பட்டு ....

உடன் படிக்கரவங்க கிட்ட கேட்டா என்ன பெரிய கவினு நினப்ப நீ ஒரு கவி எழுது பாக்கலாம்னு உண்மைய பாக்காம ...

சின்ன பாப்பா வா ...என்ன செய்ய ....


பாரதி பொய் ...பாப்பா...பாப்பா பொய்னு புலம்பரத தவிர






.

3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல கேள்வி

சுதர்ஷன் said...

ஆயிரம் இருக்கு ஆனா இருக்க கூடாதுன்னு சொல்றார் ..தெளிவாகீடீன்களா ? :)

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

goma said...

இந்த ஒரு கேள்வி ,
சரியான கேள்வியாக எண்ணுகிறேன்.