Saturday 26 February 2011

நமக்குத் தொழில் கவிதை

நேற்று என்னைச் சந்தித்த தோழி கேட்டாள் .நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் அதனை நாம் பின்பற்ற வேண்டும் தெரியுமா ? என சொல்லியதோடு மிகவும் சொக்கிப்போய் என்ன வரிகள் ,என்ன வரிகள் என்ற பொழுது ,நான் இதை எழுதியவரை உமக்கு தெரியும் ,ஆனால் ,எதற்காக ,எப்பொழுது ,எதற்காக எழுதியது என்பதனை தெரிந்து கொள்ளவும் என விவரங்களை கூறியதை இங்கே உங்களின் பார்வைக்கும் ....

இது எடுக்கப்பட்ட இடம் பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலை-யினின்று .

தமது நங்குடிகளின் தொழில் கவிதை எழுதுவது ,தனது குடிகளின் நாட்டிற்கு உழைப்பது ,இவ்விசயத்தில் இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் மேற்கொள்ளவேண்டும் அப்பத்தான் உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது .சிந்தையே, சிந்தையே, இம்மூன்றும் யாருக்குனு பார்

பொதுவாதனது அல்ல


//நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே, இம்மூன்றுஞ் செய். //
முதலில் ஒரு ஆக்கத்தை எப்படி படிப்பது என தெரிந்து படிக்கவேண்டும்

Saturday 19 February 2011

பாரதி ...பாப்பா...பாப்பா பொய்

யார் யாரிட்ட எது எதில என்னாத்துக்கொல்லாம் பொய் பேசரதுனு விவஸ்தையே இல்லை .

பெரியவங்கள ஏமாத்த பொய் சொன்னா அதக்கூட பெரியவங்களுக்கு புத்தியென்ன கேட்டாபோச்சு இத நம்பரதுக்குனு சொல்லி ஆதரவாளர்கள் தப்பிக்கலாம் .

ஆனா

சின்ன பிள்ளைங்க எங்ககிட்ட போய் யாராச்சும் பொய் சொல்லுவாங்களா ... அதுவும் மகாகவினு சொல்லிட்டு

//சாதிகள் இல்லையடி பாப்பா! - //


னு சொல்லிட்டு

// ஆயிரம் உண்டிங்கு ஜாதி -//


னு சொன்னா ... இது ஏமாத்து... பொய்னு
சின்னப்பிள்ளைக யாரிடம் போய் முறையிடமுடியும்? .

டீச்சரிட்ட கேட்டா ...பாரதியவே கேள்வி கேக்க ஆரம்பிச்சட்டயா ? .நீ என்ன பெரிய அறிவாளாயானு மட்டந்தட்டப்பட்டு ....

உடன் படிக்கரவங்க கிட்ட கேட்டா என்ன பெரிய கவினு நினப்ப நீ ஒரு கவி எழுது பாக்கலாம்னு உண்மைய பாக்காம ...

சின்ன பாப்பா வா ...என்ன செய்ய ....


பாரதி பொய் ...பாப்பா...பாப்பா பொய்னு புலம்பரத தவிர


.

Friday 18 February 2011

பாரதி ஏன் கோட்டு போட்டுள்ளார் ?

நொம்ம நாளா என்னுள் ஓடிக்கிட்டிருந்த எங்கப்பா என்னிடம் கேட்ட கேள்வியிது .தமிழ் நாட்டுக்கு வந்து இங்குள்ள தமிழர்களின் வறுமை நிலையப்பாத்திட்டு மிகவும் மனமுடைஞ்சு வழக்கறிஞரான தான் தனது உடையினை அவர்கள் என்று நல்ல உடை உடுத்துகின்றார்களே அன்று தான் நானும் நல்ல உடை உடுப்பேனு சபதம் எடுக்கும் அளவிற்கு இங்கு வறுமை இருந்துள்ளதை காந்தியின் உடை மாற்றம் என்னும் நிகழ்ச்சி நமக்கு பாடம் .இது நடந்தது மதுரையில .அங்க தான் சேதுபது ஸ்கூலில் வேளை பாத்தார் மகா கவி .ஒரு தேசத்தொண்டருக்கு அதுவும் மகா கவிக்கு ஏன் இந்த மக்கள் கண்களுக்கு தெரியவில்லை .அது பற்றி அவரின் நெஞ்சு ஏன் பொறுக்கவில்லை ? .ஏழைய விடுங்க பாரதிக்கு அவங்கொல்லாம் முக்கியமில்லாதவங்க .சரி, பாரதி ஏன் கோட்டு போட்டுள்ளார் ? என்பதற்கு எங்கும் பதிலே இல்லை .

ஆனால்

பாரதி தான் மட்டும் கோட்டு போட்டுக்குவாராம் .மந்தவங்க போட்டுக்கிட்டா என்னாவா பதரி(றி) பாடுராறு பாருங்க ...

//ஒரு சார்
மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்
செய்கையும் நடையும் தீனியும் உடையும்
கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை
யவற்றினுஞ் சிறந்தன, ஆதலின், அவற்றை

முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால்,
தமிழச் சாதி தரணிமீ திராது //

என்னையா நாயம் ? .

அடுத்தவனுக்கும் மட்டும் தான் எல்லாம் .


.

Thursday 17 February 2011

பாரதியார் போதை

பாரதியார் பற்றி அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் ஒரு வித போதையான பிம்பத்தை கட்டிவைத்திருக்கிறது. அதிலும் ப(வெ)ட்டி மன்றங்களில் பாரதியாரைப் பற்றி பேசாத பேச்சாளர்கள் மிக மிகச் சொற்ப அளவினரே.முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சில வலைப்பதிவர்கள் கூட அவரவர்கள் வலைப்பதிவில் பாரதியாரின் மேற்கோள்களை பதிவிட்டு ”பாரதியார் போதை” என்னும் மயக்கத்தில் தள்ளாடி வருகின்றனர். உண்மையில் பாரதியார் யார்? அவர் யாருக்காக?எதற்காக? என்ன நோக்கத்திற்காக பாடினார் -செயல்பட்டார் என்பதை இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது. ஊன்றிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்...நன்றி : தமிழ் ஓவியா.பாரதியார் மண்டபமா? பார்ப்பனர் வெற்றிச் சின்னமா?

தமிழ்நாட்டில் தமிழனுக்கு இன உணர்ச்சி தலையெடுத்து தமிழ் மொழிப்பற்றின் ஆர்வம் வெளியானது ஆச்சாரியார் கட்டாய இந்தியைப் புகுத்திய நேரத்தில் நிகழ்த்திய போராட்டத்தினாலாகும்.

தமிழ்பற்று மிகுந்து இன உணர்ச்சி தோன்றிபோது தான் தமிழ் மக்கள் தங்களின் உண்மையான பகைவர் யார்? பகைமைக் கருவிகள் யாவை? எனத் தீவிரமாகச் சிந்திக்கத் தலைப்பட்டனர். பார்ப்பனர் பார்னரல்லாதார் என்று கூறுவதே இழிவு என உணர்ந்து தங்களுக்கென, தங்களையே குறிக்கும் தனிப் பெயர் கொள்ள விரும்பினார்கள். இவ்விருப்பம் இறுதியில் திராவிடர் என்று, வரலாற்றிற்கும், இழிந்த நிலை மாறி மனித நிலையடைதற்கும் பொருத்தமாக, யாரும் அசைக்க முடியாத உண்மைப் பெயராக, உணர்ச்சி தருங் கருவியாக அமைந்து விட்டது. இந்நிலையையுணர்ந்த தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள், இந்நிலை நீடிக்குமேயானால் தங்களின் சோம்பேறி வாழ்வு சுடுகாடாகும் என்பதை நன்கு உணர்ந்து, வழக்கம் போல சாம பேத தான தண்டம் என நான்கு வகை உபாயங்களையும் கையாளுகின்றனர்.

தமிழ் மக்களின் தமிழுணர்ச்சியை ஆரியர்க்கு விரோதமாக வீறிட்டெழுந்த விழுமிய உணர்ச்சி வெள்ளத்தை வேறு வகையில் திருப்பி திராவிடர்களுக்குள்ளேயே பிளவையுண்டு பண்ண வேண்டும் என்ற திட்டமிட்டே, தமிழர் - தெலுங்கர் போராட்டமாக மாற்றித் தவறுதலான வேறு வழியில் செல்ல இந்நாட்டுப் பார்ப்பனர்கள் முயலுகின்றார்கள். இம்முயற்சிக்கு, இந்நாட்டு வரலாற்றின் வாய்மைக் கிணங்கச் சில திராவிடர்களே தமிழர் தெலுங்கர் போராட்டத்தைத் தொடங்குகின்றார்கள் என வெளியுலகிற்குக் காண்பிக்கின்றது இந்நாட்டு ஆரியம். இவ்வுண்மையைத் தமிழ் நாட்டு அரசியல் போக்கைக் கண்ணுற்று வருகின்றவர்கள் நன்கு உணரலாம்.

தமிழுணர்ச்சி ஆரியத்தை அழிக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காகக் கையாளுகிற மற்றொரு வகை முயற்சிதான், பாரதி விழாவும் பாரதி ஒட்டிய பிற நினைவுக்குறி நிகழ்ச்சிகளும் ஆகும்.

தமிழ் நாட்டின் பெரும் புலவர்களாகிய தொல்காப்பியர், திருவள்ளுவர், அவ்வையார் போன்றவர்களை ஆரியக்கலப்பு என்று கூறி, இந்நாட்டு மக்களை ஆரியர்கள் இழிவு செய்து தன்னினத்திற்குப் பெருமை தேடிக் கொண்டதும், தமிழ் நாட்டின் பெருமையைச் சிதைத்து வந்த தமிழைக் கற்ற உ.வே.சாமி நாதய்யர், ராகவய்யங்கார் போன்ற ஆரியர்க்கு உயர்வு தந்து தன்னினப் பெருமையை நிலைநாட்டிக் கொண்டதும், தமிழ் வரலாற்றை அறிந்தோர் உணர முடியும். ஆரியர்கள் கையாண்டு வரும் பரம்பரை வித்தைக் கிணங்கவே சமீபத்தில் சுப்பிரமணிய பாரதியார் என்ற பார்ப்பனர்க்கு மண்டபம் எழுப்பிக் கும்பாபிஷேகம் செய்ததுமாகும்.

பாரதியாரை நல்லதொரு வெள்ளைக் கவிஞர் என்று கூறுவதிலோ, உணர்ச்சி ததும்பப் பாடுபவர் என்று கூறுவதிலோ நமக்கு எத்தகைய ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பாரதியாரைத் தமிழ் நாட்டுத் தனிப்பெருங் கவிஞர் என்றும், தமிழுணர்ச்சியை வளர்த்தவர் என்றும் தமிழன் தலை நிமிர்ந்து நடக்க வழி செய்தவர் என்றும் கூறுவதுதான் திராவிட இனத்திற்கே அழிவைத் தருவதாய், திராவிட உணர்ச்சியை ஒழிக்கவல்லதாய் இருக்கின்றது என்பதையும், ஆரியர்கள், பாரதியாரைக் காட்டித் திராவிட உணர்ச்சியை ஒடுக்க வழி செய்கிறார்கள் என்பதையும் எடுத்துக்கூற வேண்டிய நிலையை உண்டாக்கியிருக்கிறது.

தமிழறிஞர்களே! தமிழ்நாட்டு வரலாற்றைப் படித்த மாணவர்களே! நீங்கள் அறிந்த வரலாற்றை உங்களின் நினைவிற்குக் கொண்டு வாருங்கள். எந்த வரலாற்றிலாவது நீங்கள் வாழுகின்ற இத்தமிழ்நாடு ஆரிய நாடு என்று தீட்டப்பட்டிருக்கிறதா?. தமிழ்நாட்டின் "அமரகவி" பாரதியார் கூறுவதைக் கேளுங்கள். நீங்கள் இப்பகுதிகளை அறிந்திருந்தாலும், அவை அறிவில் நிலையாதவாறு இந்நாட்டு ஆரியம் பேரொலி எழுப்பி, வெவ்வேறு வழிகளில் அறிவைச் செலுத்தச் செய்திருக்கின்றது என்பதனாலேயே, இங்கு அவற்றை எடுத்தியம்ப முன் வந்ததாகும்.

"உன்னத ஆரிய நாடெங்கள் நாடே"
என்று நாட்டின் பெயரைக் கூறி

"வானாறு பேரிமய வெற்பு முதல் பெண்குமரி யீறாகும் ஆரியநா டென்றே யறி"

என்று ஆரிய நாட்டிற்கு எல்லையும் கூறுகிறார்.

இவர் கூறுகின்ற எல்லை முன்பொரு காலத்தில், "ஒரு மொழிவைத் துலகாண்ட" இமயவரம்பன் காலத்தில், தமிழ் நாட்டின் எல்லையாகும்," எனப் புறநாநூறு போன்ற தமிழிலக்கியங்கள் கூறும் பாரதியார், தமிழ்நாட்டின் எல்லையாக நூல்களில் குறித்திருப்பதையே ஆரிய நாட்டின் எல்லையாகக் கூறுகின்றார். தமிழ் நாட்டை ஆரிய நாடாகக் கூறுகின்ற பாரதியார் தமிழர்களின் பெருமையை ஆரியர்களின் பெருமையாகக் கூறுகின்றாரா என்றால் இல்லை.

"ஆதிமறை தோன்றிய ஆரிய நாடே"
என்று கூறுகின்றார்.

மேலும்,

"முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடைய வில்" ஆரிய ராணியின் வில் ஆரிய ராணியின் சொல் ஆரிய தேவியின் தேர்

என ஆரியர்களின் பெருமையாக ஆரிய இராமனின் பெருமையைக் கூறுகின்றார்.

ஆரியர்களுடைய வேதங்களைக் (ஆங்கில ஆட்சியின் துணையைக் கொண்டு) கற்றறிந்த திராவிடர்கள், வேதங்களின் உண்மையை எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். தங்களுக்கு மாறுபட்டவர்களாயிருப்பவர்கள், "உயர்ந்த மாடி வீடுகளில், சிறந்த அணிகளோடு, நிறைந்த வாழ்வு வாழுகின்றார்களே" என வயிறெரிந்து இந்திரனையும் பிற தேவர்களையும் அழைத்து; இந்தத் தஸ்யூக்களை அரக்கர்களை அழித்துவிடுக" என வேண்டிக் கொண்ட பகுதிகளே வேதத்தில் நிரம்பவுண்டு என்று விளக்கங் கூறுகின்றார்கள். மகாகவி பாரதியார் கிருஷ்ணனை அழைத்துக் கூறுகின்ற கூப்பாட்டை நன்கு சிந்தித்துப் பாருங்கள்.

"ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான்" "ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மை தந்த" "எங்கள் ஆரிய பூமியெனும் பயிர் மங்களம் பெற" "ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே" "ஆரிய! நீயும் நின் அறமறந்தாயோ" "வெஞ் செயலரக்கரை வீட்டிடுவோனே" "ஆரியர் கோனே"

இக்கூப்பாட்டிற்கும் வேதங்களில் காணப்படும் பழைய ஆரியர்களின் கூப்பாட்டிற்கும் ஏதேனும் வேறுபாடு காண முடிகிறதா?.

தமிழருக்குத் தமிழ் மொழியைத் தந்தவர்களே ஆரியர்கள் தான் என்பது ஆரியர்களின் கூற்று. தமிழர்கள் காட்டுமிராண்டிகளாயிருந்தார்கள். அவர்களை நாரிகமுடையவர்களாக்கித் தமிழைச் செம்மையாக்கித் தந்தவர் குடத்திலிருந்து பிறந்த அகத்திய முனிவர் என்பது ஆரியர்கள் கூறுங்கதை. இதனையேதான் தமிழின் பெருமையாக உலக மகாகவி கூறுகின்றார்.

"ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு...... இலக்கணஞ் செய்து கொடுத்தான்"

எனவும்

"ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்"
இவ்வடிகளின் பொருளை நன்றாகச் சிந்தியுங்கள். இவை ஆரியத்தின் பெருமையை விளக்குகின்றதா? தமிழின் பெருமையை விளக்குகின்றதா?

வஞ்சத்திற்கு ஆண்மை என்பது ஆரியர்களின் அகராதிப் பொருள். வாலியை மறைந்து கொன்ற இராமன் பேராண்மையாளர் புருடோத்தமன் என ஆரியங்கூறும். அதே போல பாரதியார் ஆசையைப் பாருங்கள்!

"ஆரிய நாட்டினர் ஆண்மை யோடியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக"

எனக் கூறுகின்றார்.

இவ்வாறு, பாரதியார் ஆரிய நாடு, ஆரிய இனம், ஆரிய மொழி, ஆரியக் கலை, ஆரியக் கடவுள், பெருமைகளையே பெருமையாகப் போற்றிப் பாராட்டியிருக்க, அவரைத் திராவிட இனத்தவர் போற்றுவது மானத்தோடு பொருந்திய செயலாய் இருக்க முடியுமா?

தீபாவளி, கிருஷ்ணஜயந்தி, ராமநவமி, சமணர் கழுவேற்றப்பட்ட உற்சவம் ஆகியவற்றைக் கொண்டாடுவது ஆரியர்களின் பெருமையையும் திராவிடர்களின் சிறுமையையும் எவ்வாறு உணர்த்துகின்றதோ, அதுபோலத்தான் பாரதியார் விழாக் கொண்டாடுவதிலும், பாரதியாருக்கு மண்டபம் சமைப்பதிலும் உள்ளது என்றால் யாரேனும் மறுத்துக்கூற வியலுமா?

பாரதியாருக்குக் கோவில் கட்டுவதிலோ அல்லது அதுபோன்ற பிற செயல்களிலோ நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், இத்தகைய செயல்களில் தமிழர்கள் திராவிடர்கள் கலந்து கொள்ளலாமா? எட்டையாபுரம் ராஜாவைப் போன்ற குறு நில மன்னர்கள், ஆரியத்தின் பெருமைக்கும் திராவிடத்தின் இழிவுக்கும் மடி தாங்கலாமா? என்ற கேள்வியை இனமானமுள்ள திராவிடன் கேளாமல் இருக்க முடியுமா?

திராவிட மந்திரிகளோ என்றால், அவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஏனெனில் அவர்கள் நிலைமை அப்படி. அவர்கள் பெயரையே, ஆரியர்கள், மந்திரிப் பட்டியலிலிருந்து அழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கடைசி எழுத்திலே கையை வைத்து "ரி"யை அழித்த நிலையில்தான், இன்று அவர்கள் இராமயணத்தில் காணப்படும் குரங்கு வால்நரர்களைப் போல, ஆரிய உயர்வுக்குப் பாடுபட வேண்டியவர்களாய் ஆகிவிட்டார்கள். அனுமாரைப் போல இந்நாட்டு இளைஞர்களும் ஆகவேண்டும் என்று, திராவிட மந்திரிகளே வாய் விட்டுக் கூறுகின்றார்கள்.

நிற்க, அனுமார் கோவில்கட்டி அனுமார் படை ஏற்படுத்தி, வணங்கித் தொண்டு செய்யும் திராவிடர் இது செய்வதுதானா அருமை? என்று திராவிட இன உணர்வு கொண்டவர்கள் அமைதி கொள்ளலாம். ஆனால், பாரதியைப் பெருமைப்படுத்துகின்றவர்கள், உண்மையிலேயே தமிழைப் பெருமைப்படுத்தியவர்கள் என்றோ, தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தியவர்கள் என்றோ தமிழரைப் பெருமைப்படுத்தியவரென்றோ கூறமுடியுமா? இதை நாம் கேட்கவில்லை. பாரதியார் பாடியன என்று மேலே எடுத்துக்காட்டிய பகுதிகளே இக்கேள்வியைக் கேட்கின்றன. செவியுடையோர் சிந்தனை செய்யும் திறமுடையோர் இதை நன்கு உணரலாம்.

இவ்விழாவிற்குப் பொருளுதவி செய்தவர்களும், விழாவில் போய் மகிழ்ந்தவர்களும், விழாவை வெவ்வேறு வகையில் பெருமைப்படுத்தியவர்களும், ஆரியத்தின் பெருமை, ஆரிய உயர்வு, என்பதல்லாமல் தமிழின் பெருமை, தமிழ்நாட்டின் உயர்வு என வாயால் பேச முடியுமா? என மனதில் கையை வைத்துக் கூறுங்கள்.

திராவிட உணர்ச்சியைச் சிதைப்பதற்காகச் செய்யப்படும் ஆரியர்களின் சூழ்ச்சிகளில் ஒன்றே, இப்பாரதி மண்டப விழாவும் பாரதி விழாவும் என்பதை, இப்போதாவது திராவிடர்கள் உணர்ந்து விழித்தெழுவார்களாக!

---------------------------- 'ஈட்டி' என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை."குடிஅரசு",

இப்படி குறை கூறுவது தான் , எதிர்ப்பது தான் வேலையா என்று பொறுப்பில்லாமல் பேசும் பேர்வழிகளின் செவிப்பறையில் அறைந்து கண்களைத்திறக்கச் செய்யும் தகவல் இது

நடிகர் சிவகுமார் ஓவியக் கல்லூரியில் படித்துத் தேர்ந்த முழுமையான ஓவியர். அதனைத் தொழிலாகக் கொள்ளாமல் திரைப்படத் துறையிலே அடியெடுத்து ராணி இதழில் உங்களோடு பேசுகிறேன் என்ற தொடரை எழுதி வருகிறார். 24.1.2010 வார ராணியில் பக்கம் 22 ல் வந்தது ... மயிலாடன் எழுதியதிலிருந்து.

அவர் ஓவியர் ஆதலால் பல கோயில்களுக்கும் சென்று நேரிடையாக ஓவியம் தீட்டுவது அவரது வழக்கம். அந்த வகையில் தஞ்சாவூர் பெருவுடையார்கோயில்,திருச்சி மலைக்கோட்டைக் கோயில்களுக்குச் சென்று கோபுரங்களின் ஓவியங்களைத் தீட்டினார். பலரும் அதற்கு உதவி செய்தனர்.

சிறீரங்கம் கோயில் கோபுரத்தையும் நேரில் சென்று ஓவியம் வரைந்திட விரும்பி அங்கு சென்ற போது ஓர் அவமதிப்பு அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

கோபுரத்தில் சூரிய வெளிச்சம் நேரிடையாகப் படுகிற கோணம் புஷ்பகரணி தெப்பக்குளம் பக்கம்தான் கிடைக்கிறது என்பதால் அந்தப் பக்கம் சென்றார்
இளைஞரான ஓவியர் சிவக்குமார்.

என்ன நடந்தது?

கோயில் அர்ச்சகப் பார்ப்பனர் ஒருவர் அந்த இடத்துக்கு வந்தார். உடனே, நீ யார்? உன் குலகோத்திரம் என்ன? என்ற கேள்விக் கணைகளை அவர்முன் எறிந்தார்.
பேச்சு, உடை, முக பாவனைகளை வைத்து வந்தவர் பார்ப்பனர் இல்லை என்று தெரிந்து கொண்டதும் அர்ச்சகர் முகம் போன போக்கே சரியில்லையாம். முறையா
அனுமதி வாங்காம கோயிலுக்குள்ள படமெல்லாம் வரையக்கூடாது என்று முகத்தில் அடித்ததுபோல் கூறினாராம்.

நான் ஓர் ஓவியக் கல்லூரி மாணவன் என்று சொல்லிப் பார்த்திருக்கிறார். மசியவில்லை அர்ச்சகர்.

இத்தனை சொன்ன பிறகும் நீங்கள் கோபப்படுவது நியாயமில்லை என்று பணிவாக சொன்னாராம். ஓ, நீ நியாய தர்மம் வேறு பேசுறீயா? என்று கூறி உள்ளே போய் வேறு சில அர்ச்சகப் பார்ப்பனர்களையும் அழைத்து வந்தாராம்.

அடிக்காத குறைதானாம் _ அவமதிப்புடன் திரும்பினேன் என்று கூறும் சிவகுமார் ஒன்றைக் கூறுகிறார்:

இந்த இடத்தைக் கொஞ்சமென்ன, அதிகமாகவே கவனிக்கவேண்டும்; நெஞ்சில் நிலை நிறுத்தியும் கொள்ளவேண்டும்.

தந்தை பெரியார் மீது எனக்கு அப்பொழுது தான் பெரிய மரியாதை வந்தது

இப்படி எழுதியுள்ளார் சிவகுமார்.

தலைவலியும், திருகுவலியும் அவரவர்களுக்கும் வந்தால்தானோ!


.

.

முலைகளே சிவலிங்கம் -பாரதியார் .

பெண்களை போற்றி பாடிய மகாகவி என கட்டம் கட்டப்பட்ட பா ரதியார் தனது கவிதா விலாசத்திலும் ,கடிதத்திலும் பெண்களை எவ்வாறு எழுதி மகிழ்ந்துள்ளார் என்பதனை முன்வைப்பதன் மூலம் இதனை படிப்பவர்கள் மகா கவியா இல்ல மகா ...வா னு முடிவு கட்டலாம் .

என் தோழி என்னிடம் தான் ''பாரதி கண்ட புதுமைப்பெண்'' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி பண்ணலாமுனு இருக்கேன்னு உதவிக்கு வந்தாள் .அப்ப படிச்சு விவாதம் பண்ணியதை இங்க சிலத பகிர்கிறேன் .

''கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்
கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்;

காதலிலே இன்பமெய்திக் களித்து நின்றால்
கனமான மன்னவர்போர் எண்ணு வாரோ?
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ?
பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருது வாரோ? ''

என்ன சொல்லவர்ரார் பா ரதியார்னு கேட்டா ? .

எனக்கு பதில் அப்ப சொல்லத்தெரியல .


....

Wednesday 16 February 2011

உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்

மழை பெய்கிறது,
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப்போல, எப்போதும்
ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே
உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள்,
ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல்,
ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்
ஓயாமல் குளிந்தா காற்று வீசுகிறது.
தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது.
நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சி
யிருக்கும் மூடர் ‘விதிவசம்’ என்கிறார்கள்.
ஆமடா, விதிவசந்தான்.
‘அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது
ஈசனுடைய விதி.
சாஸ்த்ரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.
தமிழ் நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான
சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும்
மறந்துவிட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க்
கதைகளை மூடரிடங் காட்டி வயிறுபிழைத்து
வருகிறார்கள்கள்.
குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்?
அது அமிழ்தம், நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல
உடைகளுடன் குடியிருப்பாயானால்.
காற்று நன்று.
அதனை வழிபடுகின்றோம்.


.......பாரதி -வசன கவிதைகள் -3.காற்று-10லிருந்து ...

தமிழக பக்த கோடிகள் அனைவரும் மூடர்களாம் ,தமிழ் மகா கவி எப்படி தைரியமாக சொல்லியிருக்காரு ,பாத்தீங்களா .
யாருக்கு இந்த தைரியம் வரும் .

தெரிந்துகொள்ளுங்கள் தமிழக பக்த கோடிகளே,
ஆரியர்கள் உங்கள எந்த இடத்தில் வைத்துள்ளனர் தங்களின் வயிற்று பிழைப்புக்கு என்பதனை. இப்படிப்பட்ட வயிற்றுப் பிழைப்பு ஆன்மீகம் எப்படி உண்மையானதாக இருக்கமுடியும் .

சற்றே யோசியுங்கள்.

உண்மையை உணருங்கள் தமிழர்களே.
.

பிள்ளையார் X அனுமர்

எங்க ஊருல பிள்ளையாரையும் அனுமரையும் தங்களுக்கு கல்யாணம் வேண்டி கும்பிடுராங்கப்ப.அதிலும் கல்யாண பத்திரிக்கையில பிள்ளையாரை போடாமா இருப்பதில்லை.இதில என்ன கொடுமைனா 2 பேருக்குமே கல்யாணம் இல்ல.மங்கலம் அமங்கலம் னு எதுக்கெடுத்தாலும் சொல்லிக்கிட்டிருக்கும் அறிவாளிகள் .இருமணம் இணையும் பத்திரிக்கையில் கல்யாணமே ஆகாத பிள்ளையாரை போடரது மக்கலமா ? அமங்கஙமா ? .அறிவாளிகளுக்கே வெளிச்சம் .

ஆமா,பிள்ளையாரு எப்பிருந்து வந்தாரு நம்ம வீதிக்குனு தெரியுமா ? .

சுதந்திரப்போராட்டத்தின் போது தான் .

வட இந்தியாவில் அனுமன தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்தனர்.தென் இந்தியாவில் மக்கள் அப்படியில்ல கொஞ்சம் தெளிவா இருந்தாங்க .எப்படிடா இவங்கல கவுத்தரதுனு பாத்தாங்க .அதுக்கு சுதந்திரப்போராட்டத்தை பயன்படுத்துனாங்க .அன்னைக்கு வந்தார் பிரமாண்டமான பிள்ளையார் .அப்ப வந்தவர் இன்னைக்கு எல்லா இடத்திலும் வியாபித்து நல்ல விளம்பரமாகிவிட்டார் .

பிள்ளையாரை முன்னிருத்தியதே அனுமாருக்கு எதிராக .காலப்போக்கில் எல்லோரும் சொந்தக்காரங்க ஆகிவிட்டனர் மூடத்தனத்த வளர்ப்பதில் .அதனால் எல்லாம் மறச்சு போச்சி . இப்ப நல்லா மூட வியாபாரம் ஆகுது ..

Tuesday 15 February 2011

முட்டா ஆரிய பசங்க கவனத்திற்கு உம்மால் முடிந்ததப்பாரும் .

ஆட ,முட்டா ஆரிய பசங்களே , உங்களுக்கு ஒன்னு செல்லிக்கரேன் .நாங்க முன்னைப்போல மடையங்க இல்லடா ... நீ என்னுடைய இந்த வலைப்பூவ முடக்க நினைச்சு 3 முறை முயற்சித்து நான் மீண்டு விட்டேன் .இது மட்டுமல்ல நான் இனி 100 வலைப்ப்பூவை ஆரம்பிச்சு எனது கருத்த சொல்லிக்கிட்டுத்தான் இருப்போன் .உம்மால் முடிந்ததப்பாரும் .இது பழைய காலத்தைப்போல் ஆரியனுக்கு பயந்த காலம் அல்ல .நினைவில் வை . எமக்கு துணை தமிழ் உள்ளது .
.

காதலர் தினத்தில் கண்டிக்கவேண்டிய ஒன்று

என்னங்கடா இங்க நடக்குது .ஒரே கூத்தா இருக்கு .
வெக்கங்கெட்ட பயலுவலா இருக்காங்க .ஒருத்தனுக்கும் அறிவில்லைனு நினச்சுட்டானுங்க போல .என்டா செய்யரானுங்க ...

நாய்களுக்கு திருமணம் ?

நாய்களின் திருமணத்தினினால் உண்டாகும் திருமணபந்தத்தினால் அடுத்த ஆண்டு அவர்களுக்கு தெய்வக்குழந்தை பிறக்கும் என்று முக்குண்ட சாமியார் கூறியுள்ளார் . அது மதத்தை காக்குமாம் .கலாச்சாரத்தை போதிக்குமாம் .12 வது பிறப்பாக காதலனாக பிறக்க உள்ளாராம் பிதாமகன் .

ஆமா ,சென்னையில எதிர்ப்பு மும்பையில ஆதரவா .இங்க டெபாசிட் கிடைக்காது என்பதால் எதிர்ப்பு .என்னாங்கடா டேய் ஓட்டுப்பொறுக்க நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்கடா நீங்க .

யாரோ செத்ததை தீபாளினு கொண்டாடுவானுங்க .ஆனா காதலர் தங்களுக்குள் கொண்டாரத எதிர்ப்பானுவக .

இதுக்கெல்லாம் காரணம் என்னான்னா இது கிருத்துவத்திலிருந்து வந்த ஒன்றாம் .இவங்க மதம் கொடுதாம் .

ஆமா ,கிருத்துவ ஊருல ,நாட்ல உங்க ஆட்க தீபாளி கொண்டாடரது இல்லையா ? .அவங்க வேணாம்னா சொல்ரா .

கலாச்சாரம் கலாச்சாரம் என்கிறானுக ,காதலுக்கும் திருமணத்திற்கும் அர்த்தம் புரியாமல் .அவனுக மதிக்கிற திருமணம் என்னும் புனித்ததை காதலர் தினத்தில் எதிர்ப்புனு சொல்லி கோவலப்படுத்தரானுக .

இது காதலர் தினத்தில் கண்டிக்கவேண்டிய ஒன்று .

இவனுங்களும் சும்மா இருக்க மாட்டாய்ங்க ஏதாவது ஒன்ன கிளப்பிக்கிட்டே இருப்பாய்ங்க அந்த தினம் இந்த தினமுனு .மனிசனா எல்லா தினத்திலும் இருங்கபாருங்கப்பா .பிறகு மத்தத பாக்கலாம் ..

Monday 14 February 2011

கண்ணம்மா - என் காதலி

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் - துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ? ...

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் - பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் - வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ட சப்பிலே - கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ?

சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திடேன்; - அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்து உறவன்றடீ! - மிக
நெடும்பண்டைக் காலமுதற் சேர்ந்து வந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை, - அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;


வேதமடி நீ யெனக்கு,


....பாரதியார் கவிதைகளில் இருத்து

Saturday 12 February 2011

பாரதி என்னும் தமிழின துரோகிக்கு .

பாரதி -மிகவும் உன்னத கவி ,தமிழை நிமிர செய்த கவி ,தமிழுக்கு அழகு சேர்த்த கவி ,சுதந்திர தாகம் கொண்ட மனிதன் ,காக்கா குருவியக்கூட எங்க சாதினு போற்றிய நல்லவர் என புகழாத மனிதர்கள் இங்கில்லை .இப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திச்சென்றுள்ளான் தனது பார்ப்பன புலமையால் இந்த ஆரிய மைந்தன் .

பாரதி தனது ஆரிய இனம் அழிந்துபோகக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தான் .பாடினான் ,மற்றவர்களை மிகவும் மட்டமாகவே பேசினான் . தனது இனத்தை காக்க பார்பனரல்லாதோரை பார்ப்பனராக மாற்றி பூணூல் போட்டான் .தன் இனம் அழிவதை பொறுத்துக்கொள்ளாமல் .

//பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்//
என குருகுலம் இல்லாத பள்ளிகளை கோயிலாக்கி பின் தனது இனத்தின் சோற்றுக்கு பஞ்சமின்றி ஆக்க நினைத்தான் .

//சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்// என தமிழை துடைத்தெரிய முயற்சித்தான் .

//சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு //

தமிழனுக்கு தாய்நாடு

//எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே -//

இவனுக்கு தந்தை நாடாம் .என்ன கொடுமையட ஐயா ...

//தமிழ்த்தாய் // என்னும் பாடலில்
//ஆரிட மைந்தன் அகத்தியன்//
என அப்பட்டமான பொய்யை எழுதிகிறான் .

//வாழிய செந்தமிழ்! // என்னும் பாடலில்

//ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!//
என எழுதுகிறான்

இப்படி ஆரியத்தை தூக்கிப்பிடித்த துரோகிக்கொள்ளாம் பல்கலைக்கழகம் ஆனா ,அகந்தியருக்கோ ,தொல்காப்பியருக்கோ,ஔவைக்கோ ஒரு குட்டிச்சுவருகூட இல்லை ..

இந்த தேர்தலில் ஹீரோ
ஒவ்வொரு தேர்தலும் ஒருவர் ஹீரோவாக வலம்வருவது வாடிக்கையான ஒன்று .இந்தத்தேர்தலின் ஹீரோ யார் என்று பார்த்தோமானால் முதலில் இந்த தேர்தலுக்கும் இதற்கு முன் இருந்த தேர்தலுக்கும் உள்ள வித்தியாசத்தைப்பார்த்தோமானால் .சென்ற தேர்தலின் ஹீரோ தேர்தல் அறிக்கை.ஆனால் ,இந்தத்தேர்தலில் ஹீரோ தமிழனின் இருப்பு .இருப்பு என்னும் பதம் அனைத்தையும் உள்ளடக்கியது .இந்தத்தேர்தல் தான் தமிழகத்தில் மாற்று அரசியலை உருவாக்கப்போகிறது .அதனால் இந்தத்தேர்தலில் தான் தமிழர்கள் ஒவ்வொருவரும் தொலைநோக்கோடு சிந்தித்து வாக்களிக்கவேண்டும் .அதற்கு நாம் தற்பொழுதைய நிலையை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் .சென்ற தேர்தலில் போட்டியிட்ட ஹீரோவுடன் இந்தத்தேர்தலில் பணபலமும் சேர்ந்துகொள்ளும் .கிடைப்பது கட்டாயம் கிடைத்துவிடும் .அதனால் அதனை கண்டுகொள்ளவேண்டிய அவசியமில்லை தமிழக வாக்காளர்கள் .இங்கு கண்டுகொள்ளவேண்டியது ஒன்று உண்டென்றால் இது மாற்று அரசியலை வரவேற்றவேண்டியதன் அவசியத்தையும் ,அதனை வளர்ந்தெடுக்கவேண்டிய கடப்பாட்டையுமோ தவிர வேறு ஒன்றுமில்லை .அப்படியான கட்டத்தில் நாம் தமிழர்களாக இணைவதில் ,ஒன்றுசேர்வதில் ,வெற்றிகாண்பதில் உறுதியாக இருக்கவேண்டும் .

Thursday 10 February 2011

தி.மு.க -அ.தி.மு.க ரகசிய கூட்டணி

முன்பு தி.மு.க -அ.தி.மு.க கட்சிகள் தங்களின் கூட்டணி பற்றியும் அதன் உறவு பற்றியும் மட்டுமே சிந்தித்து தேர்தலில் போட்டியிட்டன . இப்பொழுது அப்படியில்லை தாங்கள் தங்களின் கூட்டணி தாண்டி சில சதிகளையும் நடத்துகின்றன .அதிலும் குறிப்பாக தாங்களைத்தவிர யாரும் ஆட்சி அதிகாரத்தை பிடித்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளதோடு .அப்படி உருவாகி வரும் மாற்று சக்தியை இரண்டு கட்சிகளும் ஒரு சேர எந்த பாகுபாடுமின்றி ஒதுக்குவது மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது .இப்படி கவனிக்கும் பட்சத்தில் தி.மு.க-அ.தி.மு.க கட்சிகள் தங்களுக்குள் எழுதாத ஒரு ரகசிய கூட்டணியை அமைத்துள்ளது.புதிதாக ஒரு மாற்று சக்தி தேன்றாமல் பார்த்துக்கொள்வது,அப்படியே தோன்றினாலும் முளையிலேயே கிள்ளி தூடைத்துவிடுவது என்பதனை தங்களின் செயல் திட்டமாக வைத்துள்ளது தங்களின் ரகசிய உடன்பாட்டில் என்பது தெளிவாகியுள்ளது .புதிதாக உருவாகும் கட்சிகள் இந்த ரகசிய கூட்டணி இரகசியத்தை தெரிந்து செயல்படுதல் நலமாக இருக்கும் .

Wednesday 9 February 2011

காங்கிரசின் மீது சவாரி ஏன் ?

திராவிட கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரசுடனான கூட்டணிக்கு காத்திருப்பதை அனைவரும் அறிவோம் .அப்படி என்ன காங்கிரசு இங்கு பலமான கட்சியா என்றால் இல்லைதான் .இருந்தாலும் அதன் மீது சவாரி செய்வதையே ஏன் ? .

திராவிட முன்னேற்றக்கழகம் காங்கிரசை எதிர்ப்பதற்காக ,தமிழ்நாட்டினின்று அதனை துரத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்பதனை இன்றைய திமுகவும் அதிலிருந்து தோன்றிய அதிமுகாவும் மறந்துவிட்டதா ?.அல்லது மக்கள் மறந்துவிட்டார்கள் என நினைத்து விட்டதா ? .

கூட்டி கழிந்து பார்த்தால் திராவிட கட்சிகளின் சுயநலமும் .தன்மானமற்ற தன்மையும் தெரியும் .

ஆட்சிக்காக காங்கிரசின் மீது சவாரி செய்யும் இவர்களை நம்பித்தான் இன்றுவரை தமிழகமும்,தமிழ் இனமும்,தமிழர்களின் எதிர்காலமும் இருக்கிறது .இது மிகவும் வெக்கக்கேடான ஒன்று .