Saturday 12 February 2011

பாரதி என்னும் தமிழின துரோகிக்கு .

பாரதி -மிகவும் உன்னத கவி ,தமிழை நிமிர செய்த கவி ,தமிழுக்கு அழகு சேர்த்த கவி ,சுதந்திர தாகம் கொண்ட மனிதன் ,காக்கா குருவியக்கூட எங்க சாதினு போற்றிய நல்லவர் என புகழாத மனிதர்கள் இங்கில்லை .இப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திச்சென்றுள்ளான் தனது பார்ப்பன புலமையால் இந்த ஆரிய மைந்தன் .

பாரதி தனது ஆரிய இனம் அழிந்துபோகக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தான் .பாடினான் ,மற்றவர்களை மிகவும் மட்டமாகவே பேசினான் . தனது இனத்தை காக்க பார்பனரல்லாதோரை பார்ப்பனராக மாற்றி பூணூல் போட்டான் .தன் இனம் அழிவதை பொறுத்துக்கொள்ளாமல் .

//பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்//
என குருகுலம் இல்லாத பள்ளிகளை கோயிலாக்கி பின் தனது இனத்தின் சோற்றுக்கு பஞ்சமின்றி ஆக்க நினைத்தான் .

//சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்// என தமிழை துடைத்தெரிய முயற்சித்தான் .

//சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு //

தமிழனுக்கு தாய்நாடு

//எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே -//

இவனுக்கு தந்தை நாடாம் .என்ன கொடுமையட ஐயா ...

//தமிழ்த்தாய் // என்னும் பாடலில்
//ஆரிட மைந்தன் அகத்தியன்//
என அப்பட்டமான பொய்யை எழுதிகிறான் .

//வாழிய செந்தமிழ்! // என்னும் பாடலில்

//ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!//
என எழுதுகிறான்

இப்படி ஆரியத்தை தூக்கிப்பிடித்த துரோகிக்கொள்ளாம் பல்கலைக்கழகம் ஆனா ,அகந்தியருக்கோ ,தொல்காப்பியருக்கோ,ஔவைக்கோ ஒரு குட்டிச்சுவருகூட இல்லை .



.

17 comments:

Unknown said...

சிந்தனைத் தெளிவில்லாத பதிவு. வன்மையாகக் கண்டிக்கிறேன்.

PRINCENRSAMA said...

சிந்தனைத் தெளிவு பாரதிக்கு இல்லையா? பாரதியை சரியாக படம்பிடித்துக் காட்டிய தோழர்க்கு இல்லையா? யோசித்து சொல்லுங்கள் கலாநேசன். சிந்தனைத் தெளிவோடு உங்களிடமிருந்து பாரதிக்கு சப்பை கட்ட பதில் எதிர்பார்க்கிறோம்

அன்புடன் நான் said...

அய்யா... பாரதி ஆரியத்தை வளர்க்க ஆசைப்பட்டவராக இருந்திருந்தால்.... அவரின் இறுதி சடங்கில் ஆரிய கூட்டம் நிறைந்திருக்கும்.....
அவரின் இறுதி சடங்கில், இருந்ததில் எத்தனை ஆரியன்?
எத்தனை திராவிடன்?

இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் பாரதியை.

எழுத்து said...

இறுதி சடங்கில் ஆரிய கூட்டம் நிறைந்தால் குட்டு வெளிப்பட்டுவிடும் என்னும் விசயம் ஞானம் இல்லாத மடையர்களா ஆரியர்கள் ...சி.கருணாகரசு .

goma said...

தேனி கொட்டுமா கொஞ்சுமா என்று பார்க்காமல் தேனின் ருசியை மட்டும் ரசிப்போம்....

எழுத்து said...

தேனி யல்ல தேள் ...goma .

Anonymous said...

வளர்ந்து வரும் நாட்டில் நடக்கும் கேடுகளை களையுங்கள் உங்களால் இயன்றால், இன்று நம்மோடு இல்லாத ஒரு உயர்ந்த மனிதரின் உன்னத படைப்புகளை குறை சொல்லும் உங்கள் பதிவு உங்கள் மேல் உள்ள மதிப்பை குறைத்து கணிக்கச் செய்கிறது எப்படியெல்லாம் பிரட்சனைகளை கிளப்பமுடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சான்று என்று தான் நினைக்க முடிகிறதே தவிர நீங்கள் சுட்டிக்காட்டியவை பொருளற்ற குற்றச்சாட்டென்று பாரதியை அறிந்த அத்தனை பேருக்கும் தெரியும்..புதிய பதிவர் என்பதால் விளம்பர யுக்தியான்னு கூட தோனுது சிறந்த பதிவுகள் எழுதுங்கள் அதைவிடுத்து இது அழகல்ல தோழரே..

எழுத்து said...

//வளர்ந்து வரும் நாட்டில் நடக்கும் கேடுகளை களையுங்கள் //
நம்ம நாட்டின் கேடு சாதியும் ,மதமும் தான்
அதை களைய பல ஆணிகளை பிடுங்கவேண்டியுள்ளது

// எப்படியெல்லாம் பிரட்சனைகளை கிளப்பமுடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சான்று//
இது ஆய்வுக்கட்டுரை இதில் பிரட்சனை யாருக்கு ?


// புதிய பதிவர் என்பதால் விளம்பர யுக்தியான்னு கூட தோனுது // புரியவில்லை .என்ன விளம்பரம் ?.


//சிறந்த பதிவுகள் எழுதுங்கள் //
தாங்கள் படைத்த,படித்த சிறந்த பதிவுகளை அனுப்புயுதவுங்கள்.சிறந்த பதிவு எதுனு தெரிஞ்சுக்கரேன் .


//அதைவிடுத்து இது அழகல்ல தோழரே..//
எது
// சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து // என்பதா?. //ஆரிட மைந்தன் அகத்தியன்// என்பதா ?


...தமிழரசி .

Anonymous said...

முதலில் உங்கள் படைப்புகளை மின்னஞ்சலில் அனுப்பி வைப்பதை நிறுத்துங்கள்..தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்கிறமாதிரி நடிக்கிறவங்களை என்ன செய்ய? உங்களை திருத்துவது என் வேலையல்ல..எனக்கு மின்னஞ்சல் செய்யும் உங்கள் வேலை நிறுத்திக் கொள்ளுங்கள்..

எழுத்து said...

தாங்கள் எனக்கு அறிமுகமானவர் என்பதால் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது .இனி அவ்வாறு நடக்காது ... தமிழரசி .

Unknown said...

தமிழ் நாட்டை ஆரிய நாடாக்க முயன்றவனை ஆதரிப்பவருக்குப் பெயர் தமிழரசி !

ஆரிய அரசி என்று பெயர் வைத்துக்கொள்ளலாமே !

KANTHANAAR said...

முதல்ல நீ ஒரு கவி எழுதி அவர் போல ஆகிக் காட்டு ... அப்பறம் எல்லாத்தையும் கேளு.... பிரபலமானவர்களை கடித்து அதன் மூலம் பிரபலமாகத் துடிக்காத... கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கௌவி துக்கி மனையில வைன்னு யாரு இந்தப் போஸ்ட போடலன்னு அழுதா... ரொம்ப முடியலன்னா ஜெலுசில் போட்டுக்கோ அதெலையும் முடியலயா கீழ்பாக்ன்னு இருக்கு... அங்கப் போயி சரி பண்ணிக்கலாம்

எழுத்து said...

//முதல்ல நீ ஒரு கவி எழுதி அவர் போல ஆகிக் காட்டு ... //
என்னால் அவர் போல ஆகிக் காட் ட முடியாது ஏன்னா ,பாரதியின் குணம் கஞ்சா அதிகம் குடிப்பதோடு ,தின்னுக்கிட்டே இருப்பாது ,பின் உளருவது ...அத கவினு ....உம்மைப்போன்ற போதையர்கள் சொல்லுவது ... என்னால முடியாதுப்பா ...

//பிரபலமானவர்களை கடித்து அதன் மூலம் பிரபலமாகத் துடிக்காத...//
பிரபலம் ...ஆம்... ஆரிய பிரபலம் ...ஆரிய பலம் ...பிரபலம் ....

//கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கௌவி துக்கி மனையில வைன்னு//

அப்படி வச்சது தான் உங்க பிரபலம் ...கவினு ...

//ரொம்ப முடியலன்னா ஜெலுசில் போட்டுக்கோ அதெலையும் முடியலயா கீழ்பாக்ன்னு இருக்கு... அங்கப் போயி சரி பண்ணிக்கலாம் //

போய் சரி பண்ணிக்கப்பா ...அது தான் நல்லது

அக்னி பார்வை said...

எழுத்து கண்டிக்கப்பட வேண்டியவர் தான், பின்னே பாரதியின் முழு பார்ப்பன அசிங்கங்களை விளக்காமல், வெறும் நாலு வரியை மட்டும் சுட்டிகாட்டியதால் தான் இந்த விவாதமெல்லாம். விவாதங்களுக்கும் பதிலளிக்கும் விதமாக பதிவின் பார்ட் 2 தொடருங்கள். பாரதியின் கவிதிகளை அனைத்தையும் படித்தால் பாரதியின் இந்த முரண்பாடுகள் பல் இளிக்கும்..

அக்னி பார்வை said...

யார் கீழ் பாக்கம் போக வேண்டியர் உண்மையில் பாரதி தான் மென்டலி சேலஞ்டு பர்சன் 1. பாரதி ஏன் கட்ட பொம்மனை பற்றி கவிதை எழுதவில்லை, அதை விடும் ஏன் எட்டப்ப மகாராஜவை வாழ்த்தி பாடினான்? "வந்தேமாதரம் ஜெய வந்தே மாதரம் ஆரிய பூமியில் நாரியரும்" எது ஆரிய பூமி? அவாளே லேட்டா தான் பார'தீய' புரிஞ்சிண்டு அவா சங்கத்துக்கே மாட வச்சுண்டா... நல்ல ஒருத்தன் சட்ட பேன்ட் போட்டுகிட்டு வந்து குழந்தைய பலி கேட்ட கொடுத்துடுவீங்களோ.. நல்ல நடை இருந்த என்ன? தங்க கிண்ணத்தில் இருக்கும் விஷத்தை சாப்பிடுவீர்களோ?

எழுத்து said...

//விவாதங்களுக்கும் பதிலளிக்கும் விதமாக பதிவின் பார்ட் 2 தொடருங்கள். //

பார்ட் -2 மட்டுமல்ல
பாரதி இங்கு முழுவதும் தோலுரிக்கப்படும் .

பாரதி மட்டுமல்ல அனைத்து முட்டாள் தனங்களும் இங்கு கூறுகட்டி பிரிக்கப்படும் .

தங்களைப்போன்றவர்களின் பேராதரவுடன் ...அக்னி பார்வை .

Gokulakrishnan said...

தோழர் வே.மதிமாறன் அவர்களின் "பாரதிய ஜனதா பார்ட்டி" என்கிற நூலை வாசியுங்கள்..............
அதில் பார்ப்பன பாரதியின் முகத்திரையை அக்கு வேறு ஆணி வேராகக் கிழித்திருப்பார்.......................