மழை பெய்கிறது,
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப்போல, எப்போதும்
ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே
உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள்,
ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல்,
ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்
ஓயாமல் குளிந்தா காற்று வீசுகிறது.
தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது.
நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சி
யிருக்கும் மூடர் ‘விதிவசம்’ என்கிறார்கள்.
ஆமடா, விதிவசந்தான்.
‘அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது
ஈசனுடைய விதி.
சாஸ்த்ரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.
தமிழ் நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான
சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும்
மறந்துவிட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க்
கதைகளை மூடரிடங் காட்டி வயிறுபிழைத்து
வருகிறார்கள்கள்.
குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்?
அது அமிழ்தம், நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல
உடைகளுடன் குடியிருப்பாயானால்.
காற்று நன்று.
அதனை வழிபடுகின்றோம்.
.......பாரதி -வசன கவிதைகள் -3.காற்று-10லிருந்து ...
தமிழக பக்த கோடிகள் அனைவரும் மூடர்களாம் ,தமிழ் மகா கவி எப்படி தைரியமாக சொல்லியிருக்காரு ,பாத்தீங்களா .
யாருக்கு இந்த தைரியம் வரும் .
தெரிந்துகொள்ளுங்கள் தமிழக பக்த கோடிகளே,
ஆரியர்கள் உங்கள எந்த இடத்தில் வைத்துள்ளனர் தங்களின் வயிற்று பிழைப்புக்கு என்பதனை. இப்படிப்பட்ட வயிற்றுப் பிழைப்பு ஆன்மீகம் எப்படி உண்மையானதாக இருக்கமுடியும் .
சற்றே யோசியுங்கள்.
உண்மையை உணருங்கள் தமிழர்களே.
.
6 comments:
பாரதியார் மீது ஏன் இந்தக் காட்டம்?
சாந்தம் அமைதி ....
/பாரதியார் மீது ஏன் இந்தக் காட்டம்?
சாந்தம் அமைதி//
உண்மைய எழுதரேன் ,மகா கவி மீது காட்டம் ஒன்றுமில்லை ...goma .
மின்னஞ்சலில் பதிவுகள் வரப்பெறுகிறேன். தவிர்க்கவும். தங்களை இதற்கு முன் அறிமுகமானதாக நினைவில்லை.
உவப்பில்லாத அல்லது அச்சமூட்டும் தலைப்புகள் கொண்ட பதிவு மின்னஞ்சல்களைப் பார்த்து ரிப்போர்ட் ஸ்பேம் அழுத்திவிட்டேன். நீக்கிவிடுகிறேன்.
எதற்கும் ஒரு முறை வலைத்தளத்தைப் பார்த்துவிடலாம் என்று வந்தேன். எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கலாம். அப்படியே மின்னஞ்சல் செய்வதையும் :)
தொடர்ந்து எழுதுக. அனைவருக்கும் இதமான கருத்தாக எப்போதும் எழுதமுடியாதுதான். வெறும் ஆல்ஃபாபேட் பதிவு எழுதினால் கூட யாராவது விமர்சித்து விட வாய்ப்புண்டு.
இருந்தும்.. குறிப்பிட்ட வர்க்கத்தை மட்டும் விமர்சித்து எழுதுவதை மாற்ற முயற்சிக்கலாம். வாழ்த்துக்கள்!
//தங்களை இதற்கு முன் அறிமுகமானதாக நினைவில்லை.//
எனது பதிவிற்கு வந்து பின்னூட்மிட்டு அதில்
தாங்களின் ரோசாமகன் ஆரம்பித்த பிளாக் -கை படிக்க அழைத்ததிலிருந்து பழக்கம் நாம் .இது நடந்தது 6/27/09 ல்.
//உவப்பில்லாத அல்லது அச்சமூட்டும் தலைப்புகள் கொண்ட பதிவு //
உண்மை தான் மகாகவியின் படைப்புகள் அனைத்தும் அப்படித்தான் .
//குறிப்பிட்ட வர்க்கத்தை மட்டும் விமர்சித்து எழுதுவதை மாற்ற முயற்சிக்கலாம். //
முதலில அவாள்கள மாற்ற முயற்சிக்கலாம் .
உங்களுக்காக புதிய 2 பதிவுகள என் நண்பர்களின் பதிவிலிருந்து பதிவிடுகிறேன் . படித்துபாருங்கள் .
உண்மையை உணர தயக்கம் காட்டாவேண்டாம் நண்பா ... ஜெகநாதன்
Post a Comment